ஸ்மைல் பிரின்சஸ் காசுள்ளவர்களுக்கு கம்பெனி கொடுப்பதை முன்பு உபதொழிலாக வைத்திருந்தார். இப்போது தலைகீழ். அதுதான் மெயின் தொழில். சமீபத்தில் பூங்கா நட்சத்திர விடுதியில் ஸ்மைல் பிரின்சஸை அவரின் வாடிக்கையாளரோடு போலீஸ் சூழ்ந்து கொண்டது. பதற வேண்டுமே. ம்ஹூம்!
அலட்டலே இல்லாமல் ஸ்மைல் செல்போனில் யாருடனோ பேச, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் போலீஸ் தொப்பியைக் கழற்றி சாரி சொல்லிக் கிளம்பியிருக்கிறது. நடிகையின் இந்தக் கம்பெனி தொழிலுக்குத் தூணாகவும் துணையாகவும் இருப்பவர், மேடையேறியதும் கண் கலங்கும் ஆயிரம் படம் கண்ட அபூர்வ சிந்தாமணி என்கிறார்கள்.