Publish Date: Thu, 26 Jun 2008 (20:21 IST)
Updated Date: Thu, 26 Jun 2008 (20:20 IST)
சர்ச்சைக்குரிய வேடங்களில் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் அண்ணி நடிகை. ஆனாலும் வாய்ப்புகள்தான் வந்தபாடில்லை. பாலியல் தொழிலாளியாக நடித்த பொருள் படமும் வெளியாகவில்லை.
இது ஒருபுறமிருக்க கல்யாணம் செய்துகொள் என்று 'உயிர்' எடுக்கிறாராம் அவரது நோயாளி அம்மா. சுற்றுச்சூழல் சொல்லும்படி இல்லாததால் அண்ணியும் திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறார். மாப்பிள்ளை தேடும் படலம் முழுவீச்சில் நடந்து வருகிறது. வழக்கம்போல அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கே முன்னுரிமை.