நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவரின் பேரன் என்ற முத்திரையோடு அந்தக் குட்டிச் சிங்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். சிங்கம் உறும வேண்டாம்... இருமவாவது செய்ய வேண்டுமே... ம்ஹூம்...! மூன்றே நாளில் படம் பெட்டிக்குத் திரும்பியது.
இந்தச் சோகம் ஒருபுறம் இருக்க, படத்தில் குத்தாட்டம் போட்ட இரண்டெழுத்து நடிகை சிங்கக்குட்டியை தனது வலையில் வீழ்த்தி விட்டாராம். என்ன செய்வதென்று புரியாமல் விழிக்கிறது குட்டி சிங்கத்தின் குடும்பம்.