இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் சலசலப்பைக் கிளப்பிய அந்த வாரி வழங்கும் புதுமுக வள்ளல் நடிகர், தமிழக அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவுக்காரர். அவரையே உறவாடிக் கெடுத்திருக்கிறார் ஒரு உடன்பிறப்பு.
நடிகர் படிப்புச் செலவிற்காக ஒரு மாணவனுக்கு ஒன்றரை லட்சம் தருவதாக வாக்களித்தார். சொன்னபடி தனது கைத்தடி ஒருவரிடம் பணத்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறார். பீஸ் கட்டுவதற்கு முதல்நாள் கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்த நின்றார் மாணவனின் அம்மா. ஒன்றரை லட்சம் தருவதாகச் சொல்லிவிட்டு வெறும் பதினைந்து ஆயிரம் கொடுத்திருக்கீங்களே என்று அவர் புலம்ப, வள்ளலுக்கு வாரிப் போட்டிருக்கிறது. பிறகுதான் கைத்தடியின் கைவரிசை தெரிய வந்திருக்கிறது. அப்புறமென்ன வள்ளலுக்கு பட்ஜெட்டில் ஒன்றரை லட்சம் பளுத்திருக்கிறது.