இளமை துள்ளல் இயக்குநர் திருமணத்திற்குப் பிறகும் கயிறு அவிழ்ந்த காளையாகவே திரிகிறார். இவரின் புதிய படத்தில் நடிக்கும் பச்சையான கிளி நடிகையுடன் ஓயாத டிஸ்கஷனில் இருப்பதும், ஸ்பாட்டிற்குச் சென்ற இயக்குநரின் இனிப்பான மனைவி முகத்தில் பளார் விட்டதும் பழங்கதை. இயக்குநரின் இளமை துள்ளல் அப்படியும் அடங்காததால் விஷயத்தை உச்ச நட்சத்திர சம்பந்தியின் கவனத்திற்குக் கொண்டுபோகத் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.