Publish Date: Wed, 05 Mar 2008 (20:32 IST)
Updated Date: Wed, 05 Mar 2008 (20:31 IST)
உச்ச நடிகரின் படத்தில் நடிப்பதால் கண்ணழகி, காமெடி நடிகரின் 'கைபேசி' படத்தில் நடிக்க தயக்கம் காட்டுகிறார். உச்ச நடிகரின் படம் வெளியான பிறகு, தனது கேரியரும் உச்சம் பெறும் என்று நம்புகிறார் கண்ணழகி. அப்போது காமெடி நடிகருடன் நடிப்பது இடையூறாக இருக்கும் என்பதால்தான் இந்த பின்வாங்கல். கண்ணழகியின் திடீர் முடிவால் உதை வாங்கும் காமெடியன் விழி பிதுங்கி நிற்கிறார்.
அந்தி சாய்ந்தால் புத்திதேயும் காமெடி புயல், போதையில் உடனிருப்பவர்களை வார்த்தையால் புரட்டியெடுப்பதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருந்தார். இதனால், தோப்பாக இருந்த கூட்டம் சுருங்கி தனிமரமாகி விட்டார் புயல். காமெடி ட்ராக் எழுதவும் புயலுக்கு சரியான ஆள் இல்லை. இதனால் நகைச்சுவையாக எழுத நல்ல ஆட்களாக தேடி வருகிறார் புயல்.