புஜபல நடிகரின் பலசாலி படத்தால் வினியோகஸ்தர்களுக்குச் சிலபல கோடிகள் நஷ்டம். இழந்த பணத்தை யாரிடம் கறப்பது என நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு ரகசியக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். இந்தச் செய்தி கேட்டதில் இருந்து சித்தம் கலங்கிப் போயிருக்கிறாராம் மிஸ்டர் புஜபலம்!
நாம அறிமுகப்படுத்திய பையனாயிற்றே என்று பிரகாச நடிகரின் வீட்டிற்கு சத்தம் போடாமல் கால்ஷீட் கேட்கப் போயிருக்கிறார் அந்த இயக்குநர். வந்தவரின் நோக்கம் வாசலிலேயே தெரிய, அறிமுகப்படுத்திய நீங்க அண்ணன் மாதிரியாக்கும் என அன்பொழுகப் பேசி, கால்ஷீட் மட்டும் கேட்காதீங்க என அன்பு வேண்டுகொளும் விடுத்தாராம் நடிகர். அவரின் நாசூக்கைப் பார்த்த இயக்குநரின் ரிதமே மாறிப்போச்சு என்கிறார்கள்.
நடிப்புக்கும் தயாரிப்புக்குமாக அலைபாய்ந்த நடிகர், தனது தயாரிப்பில் உருவான படத்தை எவனோ ஒருவனுக்குக் கொடுப்பானேன் என்று, எகிப்து எம்பளக் கம்பனிக்கே கொடுத்தார். மூணு கோடிக்கு விலை பேசப்பட்ட படம் முக்கால் கோடி கூட வசூலிக்கவில்லை. இது தெரியாமல் நடிகர் பணம் கேட்டுப் போக, பக்காவாக நஷ்டக் கணக்கைக் காட்டி, பேலன்சை கேஷாத் தரீங்களா இல்லை கால்ஷீட் தந்து கழிக்கிறீங்களா என எம்பள நிர்வாகம் கேட்க, அதிர்ச்சியில் மயக்க நிலைக்கே போய் விட்டாராம் நடிகர். தயாரிப்பு என்று யாராவது சொன்னால் இப்போதெல்லாம் நடிகர் தலைதெறிக்க ஓடுகிறார்.
கோடம்பாக்கத்தில் கோட்டை கட்டி வலம்வரும் நடிகர், நான் காதலிலும் கோட்டை கட்டிவிட்டேன் என்று ஸ்டேட்மெண்ட் விடுக்க, அத்தனை பேரின் பார்வையும் முத்தழகு மீது பதிந்தது. இதைக் கேள்விப்பட்டு அதிகம் பதறியவர் ஆந்திராவில் உள்ள நடிகையின் 'பார்' நண்பரான கிங் நடிகர் தானாம். அவர் போன் போட்டு நடிகையிடம் கவுத்திட்டியே எனக் கதற, அவசர அவசரமாக கோட்டை நடிகரின் மனதில் காதல் கொடியேற்றியது நான் இல்லை என அறிக்கை வெளியிட்டார் நடிகை. அதற்குப் பிறகே கிங் நடிகர் ஸ்டெடி ஆனாராம்.
குழந்தை பிறந்த பிறகு தனது அழகு குலைந்து விடும் என இயக்குநர் கணவரை அருகில் அண்டவே விடுவதில்லையாம் மார்கண்டேயினி நடிகை. ஆந்திராவில் களரியாகப் படம் எடுக்கும் கணவர், மனைவியிடம் மட்டும் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுகிறார். குழந்தை பிறந்த பிறகு வாழ்வின் 'ரம்ய'மே பறிபோய் விட்டதாக புலம்பி வருகிறார் அந்த வஞ்சிக்கப்பட்ட கணவர்.