Publish Date: Fri, 15 Feb 2008 (14:18 IST)
Updated Date: Fri, 15 Feb 2008 (14:18 IST)
மருமகனுக்கு நடிப்புக்கான டிப்ஸ் வழங்கிக் கொண்டிருந்த சூப்பர் மாமனார், மருமகன் படத்தில் நடிக்கும் ஜோடி விஷயத்திலும் கவனம் செலுத்துகிறார். மருமகனின் புதிய படமொன்றில் நடிக்க ஷா நடிகையிடம் பேசி சம்மதம் வாங்கியது மாமனார்தானாம். கொடுத்து வைத்த மருமகன்!
பெல் காமெடியரின் ரீ-எண்ட்ரியை ஓல்டு ஈஸ் 'கோல்ட்' என அனைவரும் பாராட்டுவதால் எரிச்சலில் புகைந்து கொண்டிருக்கிறார் புயல் காமெடியன். தான் ஹீரோவாக நடித்த படம் வசூலில் பாதாளம் செல்வதை எப்படியாவது தடுத்து மேலோகம் கொண்டுவர அடிபொடிகளிடம் ஐடியா கேட்டு இம்சித்து வருகிறாராம். அகலகால் வைத்து மாட்டிக் கொள்வது, பிறகு ஐடியா கேட்டு வறுத்தெடுப்பது என்று புயலுக்கு புளிப்பு காட்டுகிறார்கள் உடனிருப்பவர்கள்.
யார் யாருக்கோ கல்யாணமாகிறது, எனக்கு மட்டும் தாலி பாக்கியம் இல்லையே என நெருங்கியவர்களிடம் கண்ணை கசக்குகிறார் கண்ணழகி. விரைவில் மாப்பிள்ளை பார்க்கவில்லையென்றால், நடிகை வேலி தாண்டுவது உறுதி என்று நடிகையின் அம்மாவிடமே நலம் விரும்பிகள் எச்சரித்திருக்கிறார்கள்.