Publish Date: Wed, 06 Feb 2008 (20:23 IST)
Updated Date: Wed, 06 Feb 2008 (20:20 IST)
1) மூவேந்தர்களில் முதலாமவரின் சம்பளம் பிரிந்து சந்தித்த படத்துக்குப் பிறகு உயர்ந்து விட்டது. இது பற்றி யாராவது கேட்டால், அவங்களா கொடுக்கிறாங்க, வேண்டாம்னு எப்பிடி சொல்றது என்று தயாரிப்பாளர்கள் மீது பழிபோட்டு தப்பிக்கிறார்கள்.
2) ஸ்லீவ்லெஸ்ஸில் வந்தாலும் 'சிக்' கென்ற இடுப்பை மட்டும் ராணுவ ரகசியமாக மறைத்து வருகிறார் மலபார் நடிகை. அசைவ வகைகளாக சாப்பிட்டு அம்மணிக்கு செல்ல தொப்பை விழுந்ததால்தான் இடையை திரைபோட்டு மறைக்கிறார் என ராணுவ ரகசியத்தை உடைத்தார் ஒரு சினிமா புள்ளி. உண்மையா மேடம்?
3) புள்ளி வைத்து கோலம் போடும் நடிகைக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நேரம், இதுவரை நடிகையிடம் ’டூ' விட்ட பெற்றோர் வீடு தேடி வந்து பாசத்தை கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். இதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை.
4) பிகினி உடையில் பொறி பறக்க வைத்தவர் ஆறடி உயர கறுப்பு ஹீரோவின் மனக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். நடிகையே விரும்பி சிறை ஏகியதுக்கான காரணம், காதலில் ஏமாற்றிய காளையை கடுப்படிக்க தானாம். எப்படியோ நடிகர் காட்டில் அடைமழை.
5) நடன இயக்குனருக்கு அந்த இடுப்பழகி மீது அபார கிறக்கம். 'கேடி' யான நடிகை ஒவ்வொரு முறையும் டபாய்த்துக் கொண்டு ஓட, தளபதி படத்தில் கெஞ்சி கூத்தாடி எப்படியோ நடிகையின் கால்ஷீட்டை வாங்கி விட்டாராம். நீங்க இல்லியானா படமே இல்லையென்று நடனம் நடிகையிடம் உருகியதாக கேள்வி.