Entertainment Film Fromhollywood 1203 24 1120324039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழகின் ரகசியம் - வெளியிட்டார் ஜுலியா ராபர்ட்ஸ்

Advertiesment
ஜுலியா ராபர்ட்ஸ்
, சனி, 24 மார்ச் 2012 (17:21 IST)
ஒரு வருடம் உயிர்வாழ ஒருவருக்கு ஒரு லட்சம் இருந்தால் போதும். அலுவாலியாவின் வறுமைக்கோடு காமெடியை கருத்தில் கொண்டால் ஒரு லட்சத்தில் ஒரு இந்திய கிராமத்தையே காப்பாற்றலாம். இதெல்லாம் நம்மூர் பஞ்சக் கணக்கு. ஜெனிஃபர் அனிஸ்டன் தனது அழகை மெயின்டெயின் செய்ய வருடத்துக்கு செலவிடும் தொகை ஜஸ்ட் 75 லட்சங்கள்.

இவ்வளவு பணத்தை செலவ‌ழி‌த்துதான் ஓரளவு இளமையாக தன்னை அவரால் காண்பிக்க முடிகிறது. அவரைவிட ஜுலியா ராபர்ட்ஸுக்கு வயது அதிகம். 44. ஆனால் பெ‌ரிதாக அலட்டிக் கொள்ளாமல் இன்னமும் இளைய தலைமுறையை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். எப்படி?

அன்பும், மகிழ்ச்சியும்தான் என்னுடைய இளமைக்கும், அழகுக்கும் காரணம் என்கிறார் சிம்பிளாக. இவருக்கு திருமணமாகி ஏழு வயதில் இரு குழந்தைகளும், நான்கு வயதில் ஒரு குழந்தையும் உள்ளன. குடும்பத்தை இவர்தான் கவனித்துக் கொள்கிறார். மகிழச்சியான குடும்பம், கணவனின் தீரா ஆன்பு... இதெல்லாம்தான் நான் அழகாக இருப்பதற்கு காரணம் என்று தனது சினிமாஸ்கோப் புன்னகையை ராபர்ட் தவழவிடுகிறார்.

அனிஸ்டன் இதை ட்ரை செய்துப் பார்க்கலாமே.

Share this Story:

Follow Webdunia tamil