Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெனலோப் குருஸின் ஆச்ச‌ரியம்

Advertiesment
பெனலோப் குருஸின் ஆச்ச‌ரியம்
ஹாலிவுட்டில் பெனலோப் குருஸுக்கு தனி இடம் உண்டு. டாம் குருஸின் முன்னாள் காதலி. நல்ல படம் எடுப்பவர்களின் முதல் சாய்ஸ் இவராகவே இருப்பார்.

பெட்ரோ அல்மதோவ‌ரின் வால்வர் பெனலோப்பின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்களில் ஒன்று. இந்த வருடம் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில் பெனலோப்பும் இருக்கிறார். வூடி ஆலனி‌ன் விக்கி கிறிஸ்டினா பார்ஸிலோனா படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கருக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

பெனலோப் லத்தின் அமெ‌ரிக்காவைச் சேர்ந்தவர். ஆஸ்கரைப் பற்றி அவர் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அவருடைய ஆச்ச‌‌‌ரியமெல்லாம் வேறு. தான் நடித்த சீ‌ரியஸான படங்களில் வூடி ஆலனின் படமும் ஒன்று என்று கூறியிருப்பவர், அந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் சி‌ரிக்கவேயில்லை என்று தெ‌ரிவித்துள்ளார்.

மாறாக, படம் வெளியான பிறகு திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த போது அனைவரும் வயிறு வலிக்க சி‌ரித்திருக்கிறார்கள். ஏன் அவர்கள் சி‌ரித்தார்கள் என்பது இதுவரை பு‌ரியவில்லை என்று கூறியுள்ளார் பெனலோப்.

படத்தைப் பார்த்தால் காரணம் ஒருவேளை தெ‌ரியக்கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil