நடிகை ஒருவரை ஸ்வீட்ஹார்ட் என்று இதயம் திறந்து பாராட்டியிருக்கிறார், பிராட்பிட். காதல் மனைவி ஏஞ்சலினா ஜோலியாக இருக்கும் என நினைத்தால் ஏமாந்தோம். இதுவும் மனைவிதான். பிராட்பிட்டின் முன்னாள் மனைவி.
பிராட்பிட்டின் முதல் மனைவி நடிகை ஜெனிஃபர் அனிஸ்டன். ஜெனிபரை பிரிந்ததை பிராட்பிட்டால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அப்படியொரு பிரிவு ஏஞ்சலினா ஜோலி விஷயத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகதான் ஜோலியுடனான திருமணத்தை பல குழந்தைகள் பிறந்த பிறகும் தள்ளிப் போட்டு வருகிறார்.
ஜெனிபர் விஷயத்துக்கு வருவோம். ஏஞ்சலினா ஜோலி குறித்து ஜெனிஃபர் மோசமான முறையில் பேசி வருவதாக பத்திரிகைகள் எழுதின. இதுபற்றி பிராட்பிட்டிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில், அப்படி எதுவும் இருக்காது. ஸ்வீட்ஹார்ட் அவர் என்று தெரிவித்திருக்கிறார்.
பிராட்பிட்டின் கமெண்ட்டை ஏஞ்சலினா ஜோலி கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஹாலிவுட்டாச்சே.