புலிகளை யாருக்குதான் பிடிக்காது? புலிகளின் வீரம் உலகறிந்தது. அதன் ஆக்ரோஷத்துக்கு முன் சிங்கமும் சிறு நரி.
சரி, விஷயத்துக்கு வருவோம். வருடத்துக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஏஞ்சலினா ஜோலிக்கு, குழந்தைகளுக்கு அடுத்தபடியாக பிடித்த விஷயம் புலி. சில தமிழக அரசியல்வாதிகள் பயப்படும் அந்தப் புலி அல்ல, நிஜ காட்டுப் புலி.
என்னை எதனுடனாவது ஒப்பிட வேண்டுமானால் புலியுடன் ஒப்பிட்டால் மகிழ்வேன். புலிகள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை. இலக்கு ஒன்றுதான் அவற்றின் நோக்கம். நானும் அப்படிதான் என்று கூறியிருக்கிறார், ஜோலி.
புலிகள் நெருக்கடியில் இருக்கும் இந்த வேளையில், புலிகளை பாதுகாக்கும் உலகளாவிய பிரச்சாரப் பொறுப்பை ஜோலியிடம் ஒப்படைத்தால் பயன் நிச்சயம் கிடைக்கும். இயற்கையின் உன்னத படைப்பல்லவா புலிகள்.