கேஸினோ ராயலில் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கத் தொடங்கிய டேனியல் கிரேக்கிற்கு சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க விருப்பம் இல்லையாம்.
கேஸினோ ராயலில் ஜேம்ஸ் பாண்டாக இவரை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்களையும் குவாண்டம் ஆஃப் சோலஸ் படம் திருப்திப் படுத்தியிருக்கிறது. இன்னும் சில வருடங்களுக்கு இவரே ஜேம்ஸ் பாண்ட் என தயாரிப்பாளர்கள் தீர்மானித்து விட்டனர்.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்திற்குமுன் Defiance என்ற படத்தில் நடிக்கிறார் கிரேக். மூன்று யூதர்களின் கதையான இது, ஹிட்லர் காலத்தில் போலந்த் நாட்டில் நடப்பதாக உருவாகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு கிரேக் வாடிச காமிக்ஸை தழுவி எடுக்கப்படும் படத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது.
இதனை மறுத்த டேனியல் கிரேக், சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.
ஜேம்ஸ் பாண்டைவிட ஒரு சூப்பர் ஹீரோ இருக்க முடியுமா என்ன.