நடிகைகளுக்கு நாய் பாசம் அதிகம் என்பது தெரியும். பாசம் அதிகமாகும்போது அரை கிலோ கறி அதிகமாக வாங்கிப் போடலாம். அல்லது சில்க் துணியில் சட்டை தைத்துப் போடலாம். பணம் செலவு செய்து படம் எடுப்பதென்றால்... ?
அதைத்தான் செய்யப் போகிறாராம் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய நாய் நார்மனைப் பற்றி வானளாவ புகழ்ந்து தள்ளினார், அனிஸ்டன்.
அது ரொம்ப புத்திசாலியாம், அன்பு நிறைந்ததாம், எதையும் சட்டென்று புரிந்து கொள்ளக் கூடியதாம். முக்கியமாக அது நாயே இல்லையாம். நாய் வடிவில் இருக்கும் மனிதப் பிறவியாம்.
விட்டால் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி விடுவாரோ என அச்சப்படும் அளவுக்கு நார்மனை புகழ்ந்தவர், அதனுடன் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்து அதிர்ச்சியடைய வைத்தார்.
இன்னும் வளர்ப்பானேன்.. நாயை வைத்து முதல்கட்டமாக கட் டு நார்மன் என்ற பெயரில் குறும் படம் எடுக்க இருக்கிறாராம். இதை நீங்கள் படிக்கும் நேரம் குறும்படம் தயாராகியிருந்தாலும் ஆச்சரியமில்லை.