மேரி ஜேன் வாட்சன். ஸ்பைடர்மேனின் காதலியின் பெயர். ஸ்பைடர்மேன் படங்களில் மேரி ஜேன் வாட்ஸனாக நடிப்பவர் கிர்ஸ்டன் டன்ஸ்ட். ஸ்பைடர்மேனுக்கு முகமூடி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு காதலி மேரியும் முக்கியம்.
ஸ்பைடர்மேன் சீரிஸை எடுத்து வரும் சோனி நிறுவனம் ஸ்பைடர்மேனின் நான்காம் மற்றும் ஐந்தாம் பாகங்களை எடுக்க தீர்மானித்துள்ளது. இந்த இரு பாகங்களிலும் ஸ்பைடர்மேனின் காதலியாக கிர்ஸ்டன் டன்ஸ்டே நடிக்கிறார். அவரை பொறுத்தவரை இது முக்கியமான வாய்ப்பு.
சோனி நிறுவனம் ஸ்பைடர்மேனின் காதலி கிர்ஸ்டன் என்று முடிவு செய்துவிட்டது. ஆனாலும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தயக்கம் காட்டி வருகிறார் கிர்ஸ்டன். கடைசி நிமிடத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயம் ஹாலிவுட்டிலும் இருக்கிறது.