படத்துக்கொரு பாய்ஃப்ரெண்ட் என்பதுதான் ஹாலிவுட் கணக்கு. இதை அட்சர சுத்தமாக பின்பற்றுகிறவர் கேமரூன் டயஸ்.
கொஞ்ச நாள் முன்பு இவரது பாய் ப்ரெண்டாக பொறுப்பேற்றிருந்தவர் ஜஸ்டின் டிம்பர்லோக். ஆள் சாதாரணமானவரல்ல. கேமரூனின் பாய் ப்ரெண்டாக பொறுப்பேற்கும் முன்பு பல பேருக்கு பாய் ப்ரெண்டாக இருந்திருக்கிறார். அதனால் கேமரூன் வேறு பாய் ப்ரெண்ட் வைத்துக் கொண்டது பற்றி இவருக்கு எந்த புகாருமில்லை.
டிம்பர் லோக் ஆள் நல்லவர். எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையுமில்லை என்று அவருக்கு பாராட்டு சான்றிதழ் படிக்கிறார் இங்கிலாந்து மாடல் பால் ஸ்கல்பர்.
யார் இந்த பால் ஸ்கல்பர்? இவர் ஏன் டிம்பர் லோக்கை பாராட்ட வேண்டும் என்று குழப்பமாக இருக்குமே? குழப்பமே வேண்டாம். கேமரூன் டயஸின் புதிய பாய் ப்ரெண்ட்தான் இந்த பால். பாய் ப்ரெண்டுகளின் ஒற்றுமையை பார்த்தால் புல்லரிக்கிறது.