மீண்டும் அப்பாவான சந்தோஷம் பிராட் பிட்டுக்கு. நம்மூர் சிவப்பு முக்கோணத்தில் இவருக்கும் சரி, மனைவி ஏஞ்சலினா ஜோலிக்கும் சரி துளி நம்பிக்கையில்லை. ஏற்கனவே ஆறு குழந்தைகள். அடுத்த வருடம் இன்னும் இரண்டு குழந்தைகளுக்கு ட்ரை பண்ணப் போகிறார்களாம்.
சமீபத்தில் வெனிஸ் வந்த பிராட் பிட் இந்த மேலும் இரு குழந்தைகள் தகவலை சொல்லி, கேட்டவர்களை கலங்கடித்தார். பிராட் பிட் வந்தது தனது புதிய படம் பர்ன் ஆஃப்டர் ரீடிங் படத்தை ப்ரமோட் செய்ய. மீடியா ப்ரமோட் செய்தது பிராட் பிடடின் அடுத்த வருட டார்கெட்டை.
வெனிஸில் இவரை காண நிறைய கூட்டம். வெனிஸ் மிதக்கும் நகரம் அல்லவா. பிராட் பிட்டிடம் ஆட்டோகிராஃப் வாங்க ஒரு கும்பல் நெருக்கியதில் அவரது ரசிகர் ஒருவர் தண்ணீரில் விழுந்து விட்டார். பிராட்தான் அவரை கை தூக்கி காப்பாற்றியிருக்கிறார். பிறகென்ன... நனைந்த ரசிகருக்கு ஆட்டோகிராஃப் போட்டு அன்பு மழையில் நனைய வைத்து அனுப்பியிருக்கிறார்.
ரியல் ஹீரோ!