ஷரோன் ஸ்டோனுக்கு என்ன வயதிருக்கும் நாற்பது? நாற்பத்தைந்து? ஆளைப் பார்த்தால் வயது விஷயத்தில் யாரும் தவறு செய்து விடுவார்கள். இந்த பேஸிக் இன்ஸ்டிண்ட் ஸ்டாரின் வயது ஐம்பது.
இந்த வயதில் டேட்டிங் செல்வது அமெரிக்காவில் சாதாரணம். மடோனாவும் டேட்டிங் சென்றிருக்கிறார். விஷயம் என்னவென்றால் இவர் டேட்டிங் சென்ற பார்ட்னருக்கு வயது இவரை விட ரொம்ப ரொம்ப குறைவு. இவரில் பாதி வயதுகூட இல்லை. வெறும் இருபத்து மூன்றுதான்.
இதுபற்றி ஷரோன் ஸ்டோன் வாய் திறக்கவில்லை. அந்த 'பாய்' பிரெண்ட்தான் இதனை தனது நண்பர்களிடம் சொல்லி திரிந்திருக்கிறான். அந்த அதிர்ஷ்டக்கார (?) இருபத்து மூன்று வயதுக்காரனின் பெயர் Chase Drefous (பார்த்து... பல் சுளுக்கிடப் போகுது)
'பாய்' பிரெண்ட் என்பதை ஷரோன் ஸ்டோன் தவறாக புரிந்திருப்பாரோ?