டாஸ்மாக்கின் கட்டிங் பிரச்சனைதான் மடோனாவுக்கும் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான்.
மடோனா ஹைரிச்சியுடன் லண்டனில் பஃப் ஒன்றை நடத்துகிறார். மடோனா நடத்தும் மது விடுதி என்பதால் குடிமகன்களிடம் நல்ல வரவேற்பு.
இதனை வசதியாக பயன்படுத்திக் கொள்கிறார் மடோனா என குற்றம் சாட்டுகிறார்கள் குடிமகன்கள். என்ன விவகாரம்?
மடோனாவின் மதுக்கூடத்தில் இரண்டு விதமான விலை வைத்து மது சப்ளை செய்கிறார்களாம். தெரிந்தவர்களுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் குறைந்த விலை. வெளியூர் பார்ட்டிகளுக்கு அதிக விலை.
ஒரே ரக மதுவை ஒவ்வொரு முறையும் பல விலையில் வாங்க வேண்டியுள்ளது என புலம்புகிறார்கள் வாடிக்கையாளர்கள். மேனேஜரிடம் கேட்டால், விலையை நிர்ணயிப்பது நாங்களில்லை மடோனா என கைவிரிக்கிறார்களாம்.
போதையிறங்கி புலம்புகிறார்கள் குடிமகன்கள்.