ஹாலிவுட்டை கலக்கும் சூப்பர் ஹீரோக்களில் யார் பெரியவன்? ஸ்பைடர் மேன், ஹல்க், ஹான் காக், அயர்ன் மேன்...?
இவர்கள் யாருமில்லை. அந்தப் பெருமை பேட்மேனையே சேரும். அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்து, ஜார்ஜ் லூகாஸின் ஸ்டார் வார்ஸ் படத்தையே பின்னுக்கு தள்ளும் என்கிறார்கள்.
பேட்மேன் பிகின்ஸ் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலனே அதன் இரண்டாம் பாகம், பேட்மேன்- தி நைட் ரைடர் படத்தையும் இயக்கினார். அமெரிக்காவில் வெளியான பதினெட்டு நாட்களில் நானூறு மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது நைட்ரைடர். இந்த மெகா வசூலை எட்ட அனிமேஷன் பிளாக் பஸ்டரான Shrek-2 படத்துக்கு 43 நாட்களாவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் டைட்டானிக் முதலிடத்திலும் ஜார்ஜ் லூகாஸின் ஸ்டார்வார்ஸ் சீரிஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளன. நைட் ரைடரின் வசூல் வேகத்தை பார்த்தால், ஸ்டார் வார்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்கிறார்கள். சரி, முதலிடம்?
டைட்டானிக் வெளியான பிறகு அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவிலும் இப்படமே வசூலில் முதலிடத்தில் உள்ளது. அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாத வசூல் அது. சூப்பர் ஹீரோக்களைவிட காதல் வலிமையானது அல்லவா!