Publish Date: Fri, 08 Aug 2008 (13:54 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (13:54 IST)
ஆன்னி ஹேத்வே-க்கும் நயன்தாராவுக்கும் ஒரே பிரச்சனை. எப்போதோ பாய் பிரெண்டுடன் அன்னியோன்யமாக இருந்த புகைப்படங்கள் இப்போது வெளியாகி புயல் கிளப்புகின்றன.
ஆன்னி தனது முன்னாள் பாய் பிரெண்ட்டுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளையும், அவரது நிர்வாண புகைப்படத்தையும் விரைவில் வெளியிடுவதாக இணையதளம் ஒன்று அறிவித்துள்ளது.
சொன்னபடி அந்த இணையதளம் புகைப்படங்களை வெளியிட்டு மானத்தை (?) வாங்கும் முன் ஆன்னி அவற்றை கைப்பற்றியாக வேண்டும். தனது சகோதரன் மைக்கேலுடன் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் ஆன்னி.
நியூயார்க்கிலுள்ள பாய்பிரெண்டின் இருப்பிடத்தில் அவை இருக்கலாம் என்பது அவரது கணிப்பு.
ஆன்னி இன்னும் இளமையாக (25 வயது) இருந்தபோது எடுத்த படங்கள் அவை. ஆன்னி கையில் சிக்கக் கூடாது என பிரார்த்தித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.