Publish Date: Fri, 08 Aug 2008 (13:53 IST)
Updated Date: Fri, 08 Aug 2008 (13:53 IST)
நடிகர் பெர்னி மேக் சிகாகோவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நுரையீரல் பாதிப்பு. ICU வில் இருக்கும் மேக் கின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக செய்திகள்.
ஆனால் மேக் கின் காரிய தரிசி ஸ்மித் இதனை மறுத்துள்ளார். மேக் கின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு வந்திருப்பது நிமோனியா என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
மேக் கின் நுரையீரல் பாதிப்பு 1983ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே மருந்துகள்... மாத்திரைகள்... 2005 வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஓசன்ஸ் தேர்ட்டீன் படத்தில் நடிக்கும் போதும் ஆரோக்கியமாகவே இருந்தார்.
மேக் குறித்த அபாயகரமான செய்திகள் அவரது குடும்பத்தை பாதித்துள்ளது. இந்த நிலைமையிலாவது அவருக்கு பிரைவஸி தாருங்கள் என்பது அவர்களது கோரிக்கை.
ஊடகங்கள் செவிசாய்க்க வேண்டிய கோரிக்கை!