கடந்த சில மாதங்களாக துரத்திக் கொண்டிருந்த நிம்மதியின்மையிலிருந்து விடுதலை அடைந்திருக்கிறார் பாரிஸ் ஹில்டன். இப்போதுதான் வாழ்க்கை அமைதியாக கழிகிறது என தனது ப்ளாக்கில் ஆனந்தப்பட்டிருக்கிறார்.
பாரிஸ் ஹில்டனுக்கு அமைதியை தந்திருப்பது, பெர்லி ஹில்ஸில் அவர் புதிதாக வாங்கியிருக்கம் சொகுசு பங்களா. இங்கு தனியாக வசித்து வருகிறார் பாரிஸ் ஹில்டன்.
இதற்கு முன்பிருந்த வீட்டில் பத்திரிகைகள், சாலைகள், பாப்பராஸிகள் என எப்போதும் தொந்தரவு. பிரைவஸி என்பதே கிடையாது. ஹெலிகாப்டர், கார்களில் வந்திறங்கும் இவர்களால் தங்களது நிம்மதி கெடுகிறது என அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பாரிஸ் ஹில்டன் மீது புகார்வேறு தெரிவித்திருந்தனர்.
புதிய வீட்டில் மேற்சொன்ன ஊடக பரபரப்புக்காரர்களின் தொந்தரவு இல்லையாம். தனிமையை முழுமையாக அனுமதிக்க முடிகிறதாம். பிரைவஸிக்கு எந்த பிரச்சினையுமில்லை.
தனது பிளாக்கில் புதிய வீட்டின் பெருமை குறித்து நீண்ட கட்டுரையே எழுதியிருக்கிறார் பாரிஸ் ஹில்டன்!