Publish Date: Thu, 24 Jul 2008 (19:55 IST)
Updated Date: Thu, 24 Jul 2008 (19:55 IST)
கதை, கால்ஷீட், காசு.... மூன்றிலும் கறாராக இருக்கும் ஹாலிவுட் நடிகைகள் குழந்தை என்று வரும்போது, அப்படியே கனிந்து விடுகின்றனர்.
இது ஹாலிவுட் நடிகைகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் சீஸன் போல, குட்வில் ஹண்டிங் படத்தில் நடித்த மின்னி டிரைவரும் கர்ப்பமாக இருக்கிறார்.
மின்னி தனது குடும்ப டாக்டரிடம் குழந்தையின் வளர்ச்சியை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அப்படி ஒருமுறை போனபோது அவரின் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்பதை கூறியிருக்கிறார். எதிர்பாராமல் சொன்ன இந்த தகவல் குறித்து டாக்டருக்கு மன வருத்தம். சரி, மின்னி என்ன சொல்கிறார்?
குழந்தை பெற்றுக்கொள்ளும் பரவசத்தில் இருந்ததால் டாக்டர் ஆண் என்று சொன்னாரா பெண் என்று சொன்னாரா என்பதை கவனிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றிருக்கிறார்.
உலகம் முழுவதும் தாய்மார்கள் ஒரேமாதிரிதான் சிந்திக்கிறார்கள்!