நிக்கோல் கிட்மேன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். ஒவ்வொரு நாளும் பரவசத்தில் கழிகிறதாம் அவருக்கு. நிக்கோலின் கணவர் கீத் அர்பனுக்கும் அப்படியே!
இந்த தம்பதிகளின் சந்தோஷத்திற்கு காரணம், புதிதாக பிறந்திருக்கம் இவர்களின் பெண் குழந்தை. குழந்தை பிறந்த பிறகு தங்கள் உலகமே மாறிப்போனதாக, சொர்க்கத்தில் இருப்பதாக இருவருமே உணர்கிறார்களாம்.
இந்த நட்சத்திர தம்பதியின் குழந்தையின் புகைப்படத்தை பிரசுரிக்க பத்திரிகைகளுக்குள் போட்டா போட்டி. டாலர்களை மில்லியனில் கொட்டிக் கொடுக்கவும் அவர்கள் தயார். தேவை குழந்தையின் ஒரேயொரு புகைப்படம்.
ஆனால் நிக்கோல் கிட்மேனும் சரி, அவரது கணவரும் சரி. இந்த புகைப்பட பேரத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. குழந்தையின் புகைப்படத்தை விளம்பரப்படுத்த விருப்பமில்லாததுடன், அதை விற்பதற்கும் விரும்பவில்லை என பத்திரிகைகளுக்கு பதிலளித்துள்ளனர்.
வித்தியாசமான ஜோடிதான்!