Publish Date: Mon, 30 Jun 2008 (16:59 IST)
Updated Date: Mon, 30 Jun 2008 (16:59 IST)
ஹாலிவுட்டின் மோஸ்ட் ஃபவர் ஃபுல் மேன் யார்?
டாம் க்ரூஸ் தொடங்கி புரூஸ் வில்லிஸ் வரை ஒரு பெரிய பட்டியல் கண்முன் தெரியுமே? இந்தப் பட்டியலை தாண்டி முதலிடம் பிடித்துள்ளார் 39 வயதான நீக்ரோ ஹீரோ வில் ஸ்மித்.
இவருக்கு இந்தப் பட்டத்தை சும்மா தூக்கி கொடுத்து விடவில்லை. இவர் நடித்து வெளிவரும் ஒவ்வொரு படங்களின் வார இறுதிவசூல் சராசரியாக முப்பது மில்லியன் டாலர்களாம். கடைசியாக வெளிவந்த ஜயாம் தி லெஜண்ட் படம் 2007ன் ஹாலிவுட் பிளாக்பஸ்டர் என்கிறார்கள். மற்ற எந்த படத்தையும் விட இதன் ஓபனிங் அதிக அளவில் இருந்ததாக கூறுகிறார்கள்.
இவையனைத்தையும் கூட்டிக் கழித்து வில் ஸ்மித்திற்கு, மோஸ்ட் ஃபவர் ஃபுல் மேல் இன் ஹாலிவுட் கிரீடத்தை அணிவித்துள்ளார்கள்.
அடுத்த மாதம் பதினொன்றாம் தேதி வில் ஸ்மித் நடித்துளள் HANCOCK உலகம் முழுவதும் வெளியாகிறது. ஸ்மித்தின் கிரீடத்தை இப்படம் தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.