நடிகர் ஜார்ஜ் குளூனிக்கு வயது அறுபது இருக்குமா? நிச்சயம் ஐம்பதுக்கு மேலிருக்கும். சாதாரண பொது ஜனங்களுக்கு ஐம்பது என்பது ஆடி அடங்கும் வயது. ஜார்ஜ் குளூனிக்கு இது ஆசை துளிர்விடும் வயது.
தனது காதலி சாரா லார்சனை கை கழுவி விட்டாராமம் குளூனி. மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த பிரிவு நடந்ததாக கூறுகிறார்கள். பிரிவுக்குப் பிறகும் இருவரும் ஹோட்டல், பிரீமியர் ஷோ என சுற்றியது, சாராவுக்கு நல்ல ஒரு கேரியரை சூளூனி அமைத்துக் கொடுக்க விரும்பியதுதானாம்.
குளூனி இப்போது முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் நட்பு வைத்திருக்கிறார். இந்த புதிய நட்பிற்காகவே சாராவுக்கு டாட்டா காண்பித்தார் என்றும் கூறுகிறார்கள்.
புதிய நட்பின் ஆயுள் மூன்று மாதமா இல்லை ஆறுமாதமா என்பது குளூனியின் ஆசையை பொறுத்தது. ஆறுமாதத்தை தாண்டாது என்பது மட்டும் நிச்சயம்.