Publish Date: Mon, 16 Jun 2008 (17:39 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
பாக்டீரியாக்களுக்கும் பாப் பராஸ்ஸி பத்திரிகையாளர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள். இருவருமே தன்னிச்சையானவர்கள், எங்கும் ஊடுருவக் கூடியவர்கள், அசந்தால் ஆளையே கவிழ்த்து விடுவார்கள்.
சாரா ஜெஸிகா பார்க்கரையும் துரத்தி துரத்தி தொல்லைக் கொடுக்கிறார்கள் பாப் பரஸ்ஸிகள். இத்தனைக்கு சாரா ஒன்றும் டீன் ஏஜ் குமரி இல்லை. வயது நாற்பத்து மூன்றாகிறது. அன்பான கணவன். ஆசைக்கு ஐந்து வயதில் ஒரு மகன்.
குடும்பமாக சென்றாலும் போட்டோ எடுக்க தூரத்துகிறார்களாம். எங்கிருப்பார்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாததால் ஸ்மை மூவியில் இருப்பது போலேவ வாழ்க்கை கழிகிறது என கோபமும் சலிப்புமாக கூறியிருக்கிறார்.
பிரபரமாகயிருப்பவர்களும் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும். நியூட்டனின் மூன்றாவது விதி செயல்படாத ஏரியாவே இல்லை.