Publish Date: Mon, 16 Jun 2008 (17:14 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:39 IST)
மாடலும் நடிகையுமான எலிசபெத் ஹர்லி தனது படுக்கையறை ரகசியத்தை சமீபத்தில் பகிரங்கப்படுத்தினார்.
ஹர்லியை சில மாதங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்தார் அருண் நய்யார். இவரொரு இந்தியர். பிரிட்டிஷ் திமிங்கலமான ஹர்லி, ஒரு இந்திய மீனவனின் தூண்டிலில் மாட்டுவதென்றால்...?
அருண் நய்யாரின் பிஸினஸ் பின்புலமே இதற்கு காரணம். நாளெல்லாம் பிஸினஸ் செய்து பவுண்டுகளாக குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹர்லியும் பிஸினஸில் இறங்கியிருக்கிறாராம்.
இரவானால் பெட்ரூமில் எங்களது லேப்-டாப்பில் பிஸினஸ் குறித்த வரவு செலவுகளை பார்ப்போம் என்றார் ஹர்லி. பெட்ரூமிலா என்ற கேள்விக்கு அழுத்தமாக ஆம் சொல்லியிருக்கிறார்.
எதை எதற்கு பயன்படுத்துவது என்பதை அருண் நய்யார் ஏன் ஹர்லிக்கு சொல்லித்தரக் கூடாது!