ஓவன் வில்சனின் நடிப்புத் திறமை மீது யாருக்கும் சந்தேகம் வேண்டாம். திரையில் நடிப்பதைவிட பலமடங்கு தரையில் ஜொலிக்கிறார். வில்சனின் காதலி, கேட் ஹட்சன். கடந்த சில மாதங்களாக வில்சனுடன் இல்லை ஹட்சன். பிரபல சைக்கிளிஸ்ட் லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்குடன் நகர்வலம் வருகிறார் இவர்.
மேலோட்டமாகப் பார்த்தால் ஓவன் வில்சனின் மீது பரிதாபம் தோன்றும். அவரை தவிக்க விட்டாரே என ஹட்சன் மீது கோபம் கூட வரும்.
அப்படி வந்தால் அது வில்சனின் கெட்டிக்காரத்தனமே அன்றி ஹட்சனின் துரோகமல்ல என்கிறார்கள் அவர்களுக்கு நெடுக்கமானவர்கள். ஹட்சன் இன்னொரு பாய்பிரெண்டை தேடுவதற்கான அத்தனை நெடுக்கடிகளையும் கொடுத்துவிட்டு இப்போது அப்பாவியாக வேடம் போடுகிறார் என வில்சனின் நண்பர்களே குற்றம்சாட்டுகிறார்கள்.
இப்போது சொல்லுங்கள்... கெட்டிக்காரர்தானே வில்சன்?