ஷாங்காய் சர்வதேத் திரைப்பட விழா விரைவில் தொடங்குகிறது. உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. விழாவின் சிறப்பு அழைப்பாளர்களுக்கான பட்டியல் தயாராகி விட்டது. ஒரே ஒரு வி.ஐ.பி.யின் பெயர் மட்டும் மிஸ்ஸிங். அவர் ஷரோன் ஸ்டோன்.
இந்த விடுபடலை ஷரோன் ஸ்டோனே எதிர்பார்த்திருப்பார். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்ற பின் சீனாவைப் பற்றிய தனது சிவப்புச் சிந்தனையை அவிழ்த்து விட்டார் ஷரோன் ஸ்டோன்.
சமீபத்தில் சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சோகத்தில் தீ வைப்பதுபோல, சீனாவின் இந்த நிலைக்கு திபெத் மீது சீனா நடந்துகொண்ட முறையே காரணம் என்ற ரீதியில் பேசினார் ஷாரோன். திபெத் மீது சீனா கட்டவிழ்த்து விடும் அதிகாரம், வன்முறை, கண்டிக்கத்தக்கது. அதேநேரத்தில் சீனாவின் பூகம்பத் துயரத்துடன் அதை ஒப்பிட்டதும் சர்ச்சைக்குரியதே!
இந்த விமர்சனத்திற்குப் பிறகு ஷாங்காயில் நடக்கும் விழாவிற்கு ஷாரோனை அழைக்க, சீனா என்ன கர்த்தரின் நாடா? கம்யூனிச நாடுதானே!