மைக்கேல் டக்ளஸ், கேத்ரின் சீட்டா ஜோன்ஸ் இணைந்து நடிக்கிறார்கள். படம் ரேசிங் தி மூன்சூன். சாதாரணமான செய்தி. ஆனால் இதன் பின்னால் உள்ள சேதிகள் அசாதாரணமானவை.
அமெரிக்கா, இந்தியா கூட்டுத் தயாரிப்பில் படங்கள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரேசிங் தி மூன்சூன் முதல் தயாரிப்பு. படத்தின் கதை (Ami Cannaan Mann) வைரக் கடத்தலைப் பற்றியது. கதை நடக்கும் இடம் இந்தியா. மைக்கேல் டக்ளஸ், கேத்ரீனாவுடன் பார்ன் சீரிஸின் நாயகன் மேட் டாமனும் படத்தில் உண்டு.
மைக்கேல் டக்ளஸ், கேத்ரின் சீட்டா ஜோன்ஸ் இதற்குமுன் சேர்ந்து நடித்தது ஸோடன்பர்க்கின் ட்ராபிக் படத்தில் போதை மருந்தை பின்புலமாகக் கொண்ட மூன்று தனித்தனி கதைகளின் தொகுப்பு ட்ராபிக், இதில் மைக்கேலும் கேத்ரினும் இரு வெவ்வேறு கதையில் நடித்திருந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு மைக்கேல் டக்ளசும் கேத்ரினும் இணைந்து நடிக்கப் போகும் முதல்படம் ரேசிங் தி மூன்சூன்.
ஒருவரி செய்திக்குப் பின்னால் பாருங்கள், உலக விஷயம் எவ்வளவு இருக்கிறதென்று!