ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு விடயத்தில் எக்ஸ்பர்ட். பெனலப் குரூஸ் நடிப்பில். மோனிகா பெலூசி கவர்ச்சியில். ஏஞ்சலினா ஜோலி ஆக்ஷனில்.
சரி ரேசர் பட நாயகி கிறிஸ்டினா ரிச்சி எதில் ஸ்பெசலிஸ்ட்?
உதட்டை ஈரமாக்கி உள்ளத்தை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். ரிச்சி முத்தத்தில் எக்ஸ்பர்ட்டாம். இதனை விமர்சகர்களோ, ரிச்சியிடம் முத்தம் வாங்கிய அதிர்ஷ்டசாலி சக நடிகர்களோ கூறவில்லை. பிறகு....?
கிறிஸ்டினா ரிச்சியே கூறியிருக்கிறார்.
திரைப்படத்தில் முத்தக்காட்சி வரும்போது நான் ஸ்பெஷலாக எந்த முன் தயாரிப்பும் எடுத்துக் கொள்வதில்லை. எப்படி முத்தமிட வேண்டும் என்று எனக்கு நல்லாவே தெரியும். ரேசரில் வரும் முத்தக் காட்சியில் நான் சிறப்பாகவே நடித்தேன்.
முத்தம் குறித்து ரிச்சி உதிர்த்த முத்துக்கள் இவை. கேட்கும் போதே பொறாமை கிளம்புகிறதா? கவுண்டர் பாசையில் சொன்னால் ஹாலிவுட்டில் இதெல்லாம் சகஜமப்பா!