ஒழுக்க விதிகளை அடிக்கடி மீறி கோர்ட் படியேறும் பாரிஸ் ஹில்டனுக்குத் திடீர் ஆசை. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவில் குழந்தை பெற்று இந்தியா போல எனக்கென்ன என்று இருக்க முடியாது. குழந்தையைச் சரியாக கவனிக்கவில்லை என்றால் தண்டனை வீடு தேடி வரும்.
பாரிஸ் ஹில்டன் தன்னையே ஒழங்காகக் கவனிக்கத் தெரியாதவர். அவர் எப்படிக் குழந்தையைப் பராமரிப்பார்?
இதற்குப் பாரிஸ் ஹில்டன் சொன்ன பதில்தான் சுவாரஸ்யம். பாரிஸ் ஹில்டன் தனது வீட்டில் செல்லப் பிராணிகளை வள்க்கிறாராம். அவற்றை நல்ல முறையில் கவனித்து வருவதால், குழந்தையையும் நல்ல முறையில் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததாம்.
நல்லவேளை பாரிஸ் ஹில்டன் அமெரிக்காவில் பிறந்தார்.