Publish Date: Mon, 12 May 2008 (17:12 IST)
Updated Date: Mon, 12 May 2008 (17:11 IST)
ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட் மேன், எக்ஸ் மேன் என எல்லா மேன்களையும் பின்னுக்கு தள்ளியிருக்கிறார் அயர்ன் மேன். அதாவது இரும்பு மனிதன்.
மார்வர் காமிக்ஸ் ஹீரோவான அயர்ன் மேனை மார்வல் நிறுவனம் திரைப்படமாக உருவாக்கியது. ராபர்ட் டெளனி ஜூனியர் அயர்ன் மேனாக நடித்திருந்தார். படத்தை இயக்கியது Jon Favreau.
சுமார் ஐநூற்று ஐம்பது கோடியில் தயாரான இப்படம், வெளியான மூன்று நாட்களில் மட்டும் வசூலித்தது நானூறு கோடிகள்! அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து என முக்கியமான நாடுகளில் எல்லாம் சூறாவளியை கிளப்பிக் கொண்டிருக்கிறார் இரும்பு மனிதன். இவனது ஓட்டத்தைப் பார்த்த நிபுணர்கள் மேன் சீரிஸின் மேன் ஆஃப்தி மேட்ச் இரும்பு மனிதனுக்குதான் என்று உறுதி கூறுகிறார்கள். அதாவது வசூலில் ஸ்பைடர் மேன், எக்ஸ் மேனையெல்லாம் இப்படம் தாண்டி விடுமாம்.
என்ன காரணமோ... நம்மூரில் மட்டும் இரும்பு மனிதனை யாரும் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.