ஹாரிசன் போர்ட்டுக்கு எத்தனை வயதிருக்கும்? தோற்றத்தைப் பார்த்து கணித்தால் தோற்று விடுவீர்கள். இந்த இண்டியானா ஜோன்ஸ் ஹீரோவின் வயது அறுபதுக்கும் மேலே. அவரது ஆசையே இருபதுக்கும் கீழே.
இண்டியானா ஜோன்ஸ் சீரிஸைப் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் இவர். ஆக்ஷன் கமர்ஷியலில் நடித்ததுதான் இன்றளவும் தான் நிலைத்து நிற்பதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.
அறுபதுக்கு மேலாவது கமர்ஷியலை தவிர்த்து கருத்துள்ள படங்களில் நடிக்கலாமே என்று கேட்டதற்கு, இன்று யார் கருத்து கேட்க சினிமாவுக்கு வருகிறார்கள். ஜாலியாக பொழுதுபோக்க வருகிறவர்களிடம் கருத்து சொல்கிறேன் என்று கஷ்டப்படுத்தாதீர்கள் என்றிருக்கிறார்.
மனிதர் மனதாலும் இளமையாகவே இருக்கிறார்!