கேமரூன் டயஸின் ரசிகர்கள் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்கள். கேமரூன் டயஸின் தந்தை எமிலியோ டயஸ் இறந்த பிறகு பொது நிகழ்ச்சியில் எதுவும் டயஸ் கலந்து கொள்ளவில்லை.
மீடியாவிலிருந்து விலகி இருந்த டயஸ் பல வாரங்களுக்குப் பிறகு, தனது புதிய படமான வாட் கேப்பன்ஸ் இன் வேகாஸின் ப்ரீமியர் ஷோவில் தனது பழைய உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.
தனது தந்தையின் மரணம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டு வருவதாகவும் டயஸ் தெரிவித்தார்.
இந்த ப்ரீமியர் ஷோவில் டயஸின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். தந்தையின் மரணம் ஏற்படுத்திய இழப்பிலிருந்து மீண்டும் சகஜநிலைக்கு வர இந்த ப்ரீமியர் ஷோ உதவியது என்றும் தெரிவித்தார் டயஸ்.
அவரின் இந்த ஸ்டேட்மெண்ட் அவரது ரசிகர்களை புத்துணர்ச்சியூட்டியிருக்கிறது.