Publish Date: Sat, 19 Apr 2008 (13:10 IST)
Updated Date: Sat, 19 Apr 2008 (13:10 IST)
டெமிமூருக்கு எத்தனை வயதிருக்கும்? புரூஸ் வில்லிஸின் முன்னாள் மனைவிக்கு வயது கூடினாலும் ஆண்களைக் கவரும் அட்ராக்ஷன் குறையவில்லை. இதற்கு அவரின் இந்நாள் கணவர் அஸ்டன் குச்சரே சாட்சி.
அஸ்டனும் சாதாரண ஆளில்லை. டெமிமூருக்கு முன் நான்கைந்து ஹாலிவுட் பிரபலங்களுடன் டேட்டிங் போனவர்தான். ஆனால், அவர்களிடம் இல்லாத ஈர்ப்பு டெமிமூரிடம் இருப்பதாகப் பூரிக்கிறார்.
புரூஸ் வில்லிஸ்- டெமிமூர் தாம்பத்தியம் பத்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. ஹாலிவுட்டில் இதெல்லாம் அதிசயம். இருவரும் பிரிந்த பிறகும் நல்ல நண்பர்களாகவே தொடர்கின்றனர்.
இதுகுறித்துப் பேசும்போது, நாம் ஒரு உறவுக்குள் போகும்போது இன்னொருவர் இடைமறித்தால் பொறாமை எழத்தான் செய்யும். ஆனால் என்னுடைய மனைவி (டெமிமூர்) தனித்துவமான பெண். அவர் புரூஸ் வில்லிஸை மதித்தால், எனக்குள் பொறாமை தோன்ற வாய்ப்பில்லை என்று விளக்கமளித்துள்ளார் அஸ்டின்.
விளக்கத்திற்குள் ஒரு பொறாமை பளிச்சிடவே செய்கிறது.