பழுத்த மரம் கல்லடி படும். ஹாரிபாட்டர் கரன்சி மரம். கல்லுடன் எப்போதும் நான்கைந்து பேராவது காத்திருப்பார்கள். புதிதாக இயக்குனர் ஜான் பச்லர்.
1986ல் ட்ரோல் என்ற படத்தை இயக்கினார் பச்லர். இதில் ஹாரிபாட்டர் ஜுனியர் என்ற கதாபாத்திரம் இடம் பெற்றிருந்தது. இது நடந்தது ஜே.கே. ரவுலிங் ஹாரிபாட்டர் கதாபாத்திரத்தை உருவாக்கும் முன்பு.
ஜான் பச்லர் தனைது ட்ரோலை மீண்டும் எடுக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஹாரிபாட்டர் ஜுனியர் என்பதை சொல்லத் தேவையில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது, ஹாரிபாட்டர் சீரிஸை தயாரித்து வரும் வார்னர் பிரதர்ஸ். உலகத்தில் ஒரேயொரு ஹாரிபாட்டர்தான். அது ஜே.கே. ரவுலிங் உருவாக்கியது. அதை படமாக்கும் உரிமை உங்களிடம் மட்டுமே உள்ளது என்பது வார்னர் பிரதர்ஸ் வாதம்.
ஜே.கே. ரவுலிங் பாட்டர் கதாபாத்திரத்தையே எனது ட்ரோல் படத்தைப் பார்த்துதான் எடுத்தார் என்பது பச்லரின் வாதம்.
ஹாரிபாட்டர் யாருக்கு சொந்தம் என்பதுதான் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பரபரப்பாகப் பேசப்படும் சினிமா செய்தி.