நவம்பர் மாதம் குவாண்டம் ஆஃப் சொலஸ் வெளியாகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கு எதிர்பார்ப்பு.
வழக்கமாக உலகை அழிக்க திட்டமிடும் ரஷ்ய வில்லன்களுடன் தான் மோதுவார் ஜேம்ஸ்பாண்ட். இந்த முறை தனது காதலிக்காக பழிவாங்குகிறாராம்.
அதேபோல், எதிரியாக இருந்தாலும் அழகிய பெண் என்றால் ஒரு காட்சியிலாவது அவரை பெட்ரூமுக்கு அபகரித்துக் கொண்டு வந்து விடுவார்.
புதிய படத்தின் நாயகி Olga Kurylenke யுடன் ரொமான்ஸ் காட்சிகளே கிடையாதாம். அப்புறம் எதற்கு அந்தப் படத்தைப் பார்க்கணும் என்று தோன்றுகிறதா?
படத்தில் இன்னொரு நடிகையும் இருக்கிறார். Gemma Arterton. அவருடன் காதல் காட்சிகளில் இஷ்டத்திற்கு நடித்துள்ளார் பாண்ட்டாக நடித்திருக்கும் டேனியல் க்ரேக். புலி புல் தின்றாலும் புலால் தின்னாமல் இருக்குமா?