பாப் பாடகியும் நடிகையுமான மடோனா அடுத்து ஒரு இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்கிறார். ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜோலிக்குப் பிறகு குழந்தைகளைத் தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவராக இருக்கிறார் மடோனா.
வரும் ஆகஸ்ட் மாதம் மடோனாவுக்கு 50 வயது நிறைவடைகிறது. இவருக்குப் பதினொரு வயதிலும் ஏழு வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2006- ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்தார்.
ஆஃப்பிரிக்கக் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பதே மடோனாவின் ஆசை. ஜனவரியில் இந்தியா வந்தபோது அவரின் தத்தெடுக்கும் ஆசை இந்தியக் குழந்தைகளின் மீது திரும்பியது.
விரைவில் இந்தியா வந்த முறைப்படி குழந்தை ஒன்றை தத்தெடுப்பதாக மடோனாவின் கணவரும் பிரபல இயக்குநருமான கை ரிச்சி தெரிவித்துள்ளார். ரிச்சி மடோனாவை விட பத்து வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.