Publish Date: Sat, 22 Mar 2008 (16:22 IST)
Updated Date: Sat, 22 Mar 2008 (16:22 IST)
ஹாலிவுட்டில் காசு கொட்டும் படங்கள் என சில உண்டு. ஹாரிபாட்டர் அதில் ஒன்று. ஜே.கே. ரவுலிங்கின் கதையான ஹாரிபாட்டர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கிறது.
ஹாரிபாட்டர் கதை திரைப்படமாக வெளிவந்து, பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதுவரை மொத்தம் நான்கு ஹாரிபாட்டர் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. விரைவில் ஐந்தாவது ஹாரிபாட்டருக்கான வேலைகள் தொடங்கயிருக்கின்றன.
ஜே.கே. ரவுலிங், ஹாரிபாட்டரின் கடைசிப் பாகத்தையும் எழுதி வெளியிட்டுவிட்டார். அதனால் ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் பாகத்தை இதே பெயரில் இரண்டு படமாக எடுக்கிறார்கள்.
ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ்-1 என்ற பெயரில் பாட்டர் சீரிஸின் ஐந்தாம் பாகம் வெளிவர உள்ளது. டேனியல் ரேட்கிளிஃப் ஐந்தாம் பாகத்தை இயக்குகிறார்.