Publish Date: Thu, 13 Mar 2008 (18:44 IST)
Updated Date: Thu, 13 Mar 2008 (18:44 IST)
கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் 'அப்ரைசிங்'. அறிவியல் கதையை அடிப்படையாகக் கொண்ட திரில்லர் வகையறாப் படமான இதை இயக்குகிறார் ஊல்ஃப்கேங் பீட்டர்சென்.
டக்ளஸ் விக், லூசி ஃபிசர் இணைந்து தயாரிக்கின்றனர். திரைக்கதை சார்லஸ் லீவிட்.
உலகத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் சக்திவாய்ந்த வேற்றுகிரக வாசிகளுக்கும், அவர்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முயலும் சில மனிதர்களுக்கும் இடையிலான போராட்டத்தின் விறுவிறு மசாலாதான் 'அப்ரைசிங்'.
ஆக்ஷன், சஸ்பென்ஸ், வாழ்க்கை என அனைத்தும் கலந்த கலவையான 'அப்ரைசிங்'கை இயக்க ஊல்ஃப்கேங் பீட்டர்சன்தான் சரியான நபர் என்கிறார் கொலம்பியா பிக்சர்ஸ் தலைவர் டக் பெல்கிராட்.
'பொசைடன்', 'டிராய்', தி பெர்ஃபக்ட் ஸ்டோர்ம்' ஆகியவை பீட்டர்சனின் புகழை பறைசாற்றும் படங்களில் சிலவாகும்.