Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சல்வடோர் டாலி வேடத்தில் ஜானி டெப்!

சல்வடோர் டாலி வேடத்தில் ஜானி டெப்!
, செவ்வாய், 11 மார்ச் 2008 (19:58 IST)
சல்வடோர் டாலி, புகழ்பெற்ற சர்ரியலிஸ ஓவியர். தி பிரசன்ஸ் ஆஃப் மெமரி உட்பட பல முக்கியப் படங்களில் பணிபுரிந்திருக்கிறார். வினோதமான கற்பனைக்குச் சொந்தக்காரர். முறுக்கி, மேல்நோக்கி, கண்ணின் இமைகளை தொட்டு நிற்கும் டாலியின் ஆண்டெனா மீசையே அவரைப் பற்றி சொல்லிவிடும்.

1989ல் தனது 84வது வயதில் மரணமடைந்த டாலியைப் பற்றி ஏற்கனவே இரண்டு படங்கள் வந்துள்ளன. ஒன்று, அல்பசினோ நடித்த டால் அண்ட் ஐ. இன்னொன்று குட்பை டாலி.

ஜானி டெப் நடிக்கயிருகூகும் படத்தின் டாலி! ஸ்கிரிப்ட் இன்னும் சரியாக அமையாததால் ஜானி டெப்பும், படத்தின் தயாரிப்பாளரும் நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

டாலி வினோதமான கற்பனைக்கு சொந்தக்காரர் என்ற சொன்னோம். அதிபயங்கர கனவுகளை காண்பதற்கென்றே, இரவு அதிக உணவு உட்கொண்டு, வேண்டுமென்றே அஜீரணக் கோளாறை வரவழைத்தபடி படுக்கைக்குச் செல்வார். அஜீரணக் கோளாறு தூக்கத்தில் பயங்கரக் கனவுகளை ஏற்படுத்தக் கூடியது.

டாலியின் பரிமாணங்களைச் சொல்ல மூன்று படங்கள் போதாது!

Share this Story:

Follow Webdunia tamil