Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்தை வெறுக்கும் ஜிம்கேரி

Advertiesment
திருமணத்தை வெறுக்கும் ஜிம்கேரி
, சனி, 8 மார்ச் 2008 (12:42 IST)
டம்ப் அண்டு டம்பர், கேபிள் கை, மாஸ்க் படங்களின் நாயகன் ஜிம் கேரி, சினிமாவில் சிரிப்பு ஆள். நிஜத்தில் சீரியஸ் ஆள். இவரது காதலி ஜென்னி மெக்கார்த்தி. பல மாதங்களாக இவருடன்தான் டேட்டிங். சரி எப்போது வெட்டிங்?

இந்தக் கேள்வியைக் கேட்டால், படத்தில் வருவது போலவே அஷ்டக்கோணலாகிறது கேரியின் முகம். கல்யாணத்தில் எல்லாம் நம்பிக்கையில்லை என்று கைவிரிக்கிறார்.

ஜென்னி இவருக்கும் மேலே? எதற்கு கல்யாணம்? பரவர நம்பிக்கைக்காகவா? கல்யாணம் பண்ணாமலேயே அப்படி இருக்கக் கூடாதா? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டு, கேள்வி கேட்பவர்களையே திணறடிக்கிறார்.

கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும் ஜிம் கேரிக்கு, அந்த ஞானோதயம் கிடைக்க, இரண்டு திருமணங்கள் செய்ய வேண்டியிருந்தது.

ஆம், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாக விவாகரத்து வாங்கியவர் ஜிம் கேரி. இவரது மகளுக்கு 20 வயதாகிறது.

இதற்கு மேல் கல்யாணம் என்ன காதல் கூட கச்சத்தான் செய்யும்.

Share this Story:

Follow Webdunia tamil