குழந்தை பெற்றுக் கொள்வது சாதாரண ஜனங்களுக்குச் செலவு. அதுவே ஜெனிபர் லோபஸ் போன்ற செலிபிரிட்டிகளுக்கு, ஜாக்பாட்!
சில நாட்களுக்கு முன்பு நியூயார்க் லாங் ஐலண்ட் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார் லோபஸ். ஒன்று ஆண், இன்னொன்று பெண்.
லோபஸின் குழந்தையைக் காண அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். பீப்பில்ஸ் பத்திரிகை லோபஸின் குழந்தைகளின் படங்களைப் பிரசுரிக்கும் உரிமையை வாங்கியிருக்கிறது. இதற்கு அந்தப் பத்திரிகை லோபஸூக்குக் கொடுத்திருப்பது, ஆறு மில்லியன் டாலர்கள்!
ஏஞ்சலினா ஜோலி- பிராட்லிட் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தபோதும், குழந்தைகளின் புகைப்படங்களைப் பிரசுரிக்க டாலர்களை அள்ளிவீசின பத்திரிகைகள்.
பிரபலங்களின் குழந்தைகள் பிறந்த உடனேயே சம்பாதிக்கத் துவங்கி விடுகின்றன.