Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2008 ஆஸ்கார் பரிந்துரை பட்டியல்!

Advertiesment
2008 ஆஸ்கார் பரிந்துரை பட்டியல்!
, செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (19:04 IST)
ஆஸ்கார் ஆரவாரம் தொடங்கிவிட்டது. 2008 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கான படங்களில் பரிந்துரை பட்டியல் கலி·போர்னியா சாமுவேல் கோல்டுவெயின் திரையரங்கில் வெளியிடப்பட்டது!

சென்ற இரு வருடங்கள் கலாச்சார சிக்கல்கள் மற்றும் மனித உறவுகள் குறித்துப் பேசிய படங்கள் ஆஸ்கார் விருதுப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தன.

இந்த வருடம் பெரிய மாறுதல். நிழல் உலகமும் வன்முறை களமும் கொண்ட 'No Country for old Men' மற்றும் 'There will be Blood' படங்கள் தலா எட்டு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த இயக்குனர், சிறந்த படம் ஆகிய முக்கிய விருதுகள் அடக்கம்.

பிரிட்டனின் வரலாற்றுப் படமான 'Atonement' மற்றும் த்ரில்லர் படமான 'Michael Clayton' தலா ஏழு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

'There will be Blood', Atonement', 'Michael Clayton' ஆகிய சீரியஸ் படங்களுடன் நகைச்சுவைப் படமான 'Juno' -வும் சிறந்தப் படத்துக்கான விருது போட்டியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த சர்ச்சைக்கிடையில் இந்தியா சார்பில், சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 'ஏகலைவா' முதல் சுற்றிலேயே போட்டியிலிருந்து எகிறிவிட்டதால், இந்த முறையும் இந்திய சினிமாவுக்கு ஆஸ்கார் வெறும் கனவுதான்.

Share this Story:

Follow Webdunia tamil