பாண்ட் நடிகர் டேனியல் க்ரேக்கின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது 'The golden compass' படம். மொத்தமாக பத்தே நிமிடம்தான் படத்தில் வருகிறார் க்ரேக்.
அதற்காக வருந்த வேண்டாம். க்ரேக்கின் புதிய ஜேம்ஸ் பாண்ட் படம் 'குவாண்டம் ஆஃப் சொலேஸ்' வேகமாக தயாராகி வருகிறது. பாண்ட் படத்தில் பாண்ட்டை விட அவரது காதலிகளுக்கே மவுசு அதிகம். இந்த முறை பாண்ட் காதலிகள் பட்டியலில் ஷில்பா ஷெட்டியின் பெயரும் இருந்தது.
ஆனால் ரேஸில் முந்திக் கொண்டவர் ஜெம்மா ஆர்த்தர்டன். க்ரேக்குடன் ஹனிமூன் சூட்டில் ஒரு காட்சியில் நடித்தேன் என இவர் உளறி வைக்க, அப்படியானால் புதிய படத்தில் ஜேம்ஸ் பாண்ட்டிற்கு திருமணம் ஆகிறதா என பல்வேறு ஊகங்களை பத்திரிகைகள் கிளப்பி விட்டன.
படத்தில் ரஷ்ய உளவாளியாக உக்ரைன் மாடல் ஒருவர் நடிக்கிறார். பெயர் ஓல்கா. (நாட் வோட்கா). வறுமையான குடும்பத்தில் பிறந்து செழுமையான மாடலிங் துறையில் சிறப்பானதொரு இடத்தைப் பிடித்திருக்கும் ஓல்காவின் வாழ்க்கையை படமாக்கினால் ஆஸ்கார் கிடைக்கும் அளவுக்கு ஒரு சிறப்பான படமாக அது இருக்கும் என்கிறார்கள்.