பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூனின் தயாரிப்பில் முப்பரிமாணத்தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் அவதார் திரைக்கு வருவது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் படி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 -ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அவதார் திரைப்படம் ஏற்கெனவே திட்டமிட்டபடி 2009 மே மாதம் 22 -ம் தேதி வெளிவர வேண்டும். ஆனால் அப்படத்தை தயாரித்து வரும் டுவண்டியத் செஞ்சுரி பாஃக்ஸ் நிறுவனம் திரைக்கு வரும் தேதியை தள்ளிவைத்துள்ளது.
இத்திரைப்படம் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வெளியான திரைப்படங்களை விட சிறப்பாகவும், எதிர்பார்த்தபடி படத்தை சிறப்பாக எடுக்க கூடுதலாக நாட்கள் தேவைப்படுவதால் வெளியாகும் தேதி தள்ளிப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்மஸையொட்டி படம் திரைக்கு வரும் நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன்பயனடைவார் என்று ஸ்டியோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் 2009 -ம் ஆண்டு டிசம்பருக்குள் 4,000 முப்பரிமாண திரையரங்குகள் நடைமுறைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அவதார் திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கும், இயக்குநருக்கும் வெற்றியாக அமையும் என்று பாஃக்ஸ் பிலிம் குழுமத்தின் துணைத்தலைவர் ஹட்ச் பார்க்கர் கூறியுள்ளார். டைட்டானிக் திரைப்படம் வெளியான நாளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.